Saturday, 5 August 2017

நட்புக்காக

வெள்ளி துளிகளினால்
மண்ணில் நனைவோம்
வண்ண கதிர்களினால்
வானில் வரிவோம்
காற்றாய் காட்டினிடையே
முகில் மூங்கில்
துளைகளினிடையே
பாடி தரிவோம்

இதுவரை நாம் பேசிடும்
மொழிகளில் நட்புடன் மகிழ்ந்தோம்
மௌனத்திலும் சில நேரம்
நம் அன்பை உணர்ந்தோம்
புது புது சுவை தினமும்
உணவில் ருசித்தோம்

கட்டியணைத்து தோலுரசி
அருகில் சில சமயம்
முகம் மறைத்த தொலைவில்
குரல் பதிவில் சில சமயம்

தொலைவிலிருந்தும் நெருக்கமாய்

பளிச்சிடும் சிரிப்பின்
கடைசி பற்களும்
நட்பின நினைவுகள் சொல்லும்

Thursday, 13 July 2017

தாமரை நீங்கிய கலையரசி


உயிரில்லா சதை பிண்டம்
உயிராக்கி சுமந்த கருப்பை
இன்று தன்னை சுமக்க வலு இழந்ததே

என்னை தாலட்டிய தாமரை இதழ்
இன்று என் இமை முன்
தாமரை நீங்கியும்
நீயே என்
கலையரசி......

Saturday, 20 May 2017

என் தனிமை

குளுமை மோதும்

சுவர்களுக்கிடையே

உருகும் மெழுகோடு

வெள்ளை காகிதம் கிலிக்கும்

பேனா முனையோடு ….

Sunday, 14 May 2017

நெஞ்சிலே

நெஞ்சிலே

உந்தன் ஞாபகம்!..

மெல்ல உன்னால்

என்னை இழக்கிறேன் ..

கொஞ்சமாய்

உற்றுப் பாரடி ...

என் கண்களில் நீயடி !

நீரடி...

Saturday, 13 May 2017

தாயே

தன்னுள் கலந்து

தன்னை கரைத்து

என்னை வளர்த்தாயே

Tuesday, 9 May 2017

பெண்ணானதோ

வான் விட்டு விண்மீன்
வனம் வந்ததோ
நீரோடு புளன்று ஓர் பெண்னானதோ!

கதிர் மோதி
மொட்டவிழும் மலர் போல
நீ சோம்பல் விரித்தாய்!

உன் இதழ் சுவைத்த
தேனீர் கோப்பை அனல் வீசும்..
நீ நடந்த
மண் சாலை மனம் வீசும்...

நித்தம் ஆயிரம் விழிகள்
நான் கடந்து சென்றேன்
ஆனால் இரு விழி மட்டும்
என் தடம் மறிப்பதேன்!

யாரும் அறியாமல் நீயும் கேட்காமல்
சில வார்த்தை சொன்னேன்
காற்றின் வழியே
நீ கேட்பாய் என்றே

நிலவின் ஒளியை குடுவையில் அடித்து
இரவில் தரவா
பணித்தீவை வெட்டி
சுடும் தீயில் இட்டு
அறையின் குளுமை சேர்க்கவா

நீ சுமக்கும் புத்தகம் நடுவில்
நீ தேடும் வரியில் ஒன்றாய்
நானும் மாறேனோ

காற்றில் கலையும் கற்றை கூந்தலில்
ஒற்றை நூலாய் மாறேனோ

நாளும் நூறு முறையேனும்
ஒத்திகை பார்த்தேன்
நேரில் உன்னிடம் சொல்ல
வரிகள் தொலைத்தேன்

Saturday, 6 May 2017

தீயில் எரிந்த கடிதம்


மடித்த கடிதம்
பிரித்து படிக்க
உதிரம் உரித்து
கடிதம் தந்தேன்!

விரித்த விழியில்
படித்த கடிதம்
தீயில் எரித்துப் போனாய் அன்பே!

Monday, 1 May 2017

நினைவு

நாட்கள் நீண்டு போகும்
வருடங்களின் நீளம் அதிகரிக்கும்
நினைவுகள் மட்டும்
நெஞ்சில் பத்திரமாகும்

Wednesday, 22 March 2017

நட்பு

நிலம் கீரி ஆழ புதையுண்ட ஓர் நட்பின் விதை

இன்று விருட்சமாய் நிழல் தரும் காலம்கனிந்தது

 

நண்பா !

எத்தனை நினைவுகள் !

ஈர் நான்கு ஆண்டுகள்

என் நினைவலைகளுக்குள்

மிக ஆழமாய் நீண்டு கிடப்பது

நம் நட்பு மட்டுமே

 

 

கேலிஇத்து சிரித்த நாட்கள் பல

சோகமாய் கண்ணீரோடு உன் தோள்கள்தேடிய நாட்கள் சில

என் முதல் காதல் தோல்வியும் உன் இருதோள்களே தாங்கின

 

 

உன்னால் எனக்கு புது உறவுகள் கிடைத்தன

உன் தாய் தந்தையர் எனதுமாய்

உன் மனைவி எனது தங்கையாய்

உன் மகன் உன்னை தாண்டிய தோழானாய்

 

 

இனி வரும் நாட்கள்

உன்னோடு என் பயணம் தொடருமாஎன்பதரியேன்

ஆனால்

இனி எங்கேனும் எனை குறித்த நினைவுகள்உன் நெஞ்சில் எழும் எனில்

 

இக்காகிதத்தை விரித்து பார்

இதில் உள்ள எழுத்துகள்

என் மூளை நரம்புகளின் ஆழத்திலிருந்துஉதிர்ந்தவை

உன் இதழ் வழி சிரிப்பிலும்

உன் இமை நீரிலும்

நான் இருப்பேன்

Saturday, 18 March 2017

தூக்கம் தூவட்டுமா


விழிமேலே
விழிமேலே
ஒரு தூக்கம் நான் தூவட்டுமா
இரு இமைகள் இடையில்
ஒரு பாலம் ஆகட்டுமா
உன்
குருஞ்சிரு
சிரிப்பினிடையில்
என் பெயர் நான் சேர்க்கட்டுமா.

மேகம் பிழிந்த
நீரெடுத்து
புலர் காலை மலரின் மேல் தெளித்து
நட்சத்திரங்களின்
நிழல் பதித்து
குயிலின் கீதம் 
தான் இசைத்து
உனக்கென ஓர் வரியில்

செந்தழல் நீரிலொரு 
பூவானதால் 
ஓர் பார்வையால் 
என் வேர் சாய்க்கிராய் 
பனி 
தீ மீதில் 
ஒரு துளியானதால் 
இதய குழாயில் 
புது நீர் பாய்ச்சினாய் 

நீர் மீது நீயும் 
இழைத் துவினாய்
இழை மீது ஊரும் 
ஓர் எறும்பாகிரறேன் 

Monday, 13 March 2017

உனக்கென சில வெண்பா

காலனி தொலைத்த சின்றெலா

சிரிப்பின் சொந்தக்காரி

நிழலிடம் மட்டுமே தோற்றுப்போகும் வீரச்சி

கனவுகள் நிறைந்த விழிகள்
வடுக்கள் மறைக்கும் உதடுகள்

பாரதி தூவிய தோட்டத்து விதையில்
மலர்ந்த சிறு பூ

கழுகின் சிறகு தேடும் சிட்டுக்குருவி

Wednesday, 8 March 2017

மகளிர் தின வாழ்த்துக்கள் - 2017

பாரினில் முதல் புரட்சி ஏவாள்
கடித்துமிழ்ந்த விதையன்றோ

வீட்டை விட்டும் படி
தாண்டி வந்தாள்
அவளை வேசி என்பவன் மடையன் அன்றோ
பூட்டி வைத்தாள்
தாள் வெட்டி விட்டு
வீர் கீச்சலுடன் வந்து சிறகடி

வெல்ல துணிவின்றி
சொல்ல வார்த்தைக்கொண்டு பழித்திடுவார்
அஃது பொதுப்பால் என்றறியும்படி பேசிடு வாய்

சக்தியும் நீயென உணர்ந்திடுவாய்
ஒரு காளியும் நீயென உணர்ந்திடுவாய்

ஏடுகள் பயில்வதும் உன் உரிமை
நாடுகள் பாய்வதும் உன் உரிமை

நான் திசைகளும் அளந்திடு உன் கால் கொண்டே
வானும் ஆழ்ந்திடு உன் கரம் கொண்டு

Monday, 13 February 2017

தோழியெனில்

மழலை உன் உடல் மொழி
சிரிப்பின் சொந்தக்காரி

உன் இமை விட்டு இறங்கும்
கண்ணீர் துளிகள்
உன் இதழ் தொடும் முன்னே
அழுகையும்
கோபமும் மறைந்து போகும்
மாயம் கண்டு
நான் வியந்த நாட்கள் உண்டு

நான் வருந்தும் வேலைகளில்
என் இமை தேடும் பெண்களில்
நீயும் ஒருத்தி
எனது கவிகளின் முதல் ரசிகை நீ

வெறும் தோழியெனில்
என்றோ ஓர் நாள்
பிரிந்தோ
மறைந்தோ பேகும் காலம் வரும்
என் தமக்கையானாய்
என் பயணங்களில் உனக்கென
ஓர் தடம் நிச்சயம் விரியும்

Wednesday, 18 January 2017

ஏறு தழுவல்

நிலம் கீறி ஆழ புதையுண்ட
ஓர் விதை
விருட்சமாய் நிழல் தரும்
காலம் கனிந்தது
இங்கு புதயுண்டது
வெறும் விதையல்ல
எம் மூத்த குடியின் வீரமும் தான்
சுமக்கும் போது என் தமையன்
தழுவம்போது என் தோழன்
ஏறு தழுவல் எம் உரிமை
வீரம் எம் உடன் பிறந்தவை
தமிழ் எம் அடையாளம்
இது குற்றம் எனில்
எம் நக்கீரன் உரைத்ததுபோல்
நெற்றிக்கண் பொருந்தியவன்
செய்ததும் குற்றமே
ஆதி ஈசன் தழுவியதும்
காளையை அல்லவா
!!!!!
தமிழ் எம் அடையாளம்

Tuesday, 10 January 2017

நண்பா

நிலம் கீரி ஆழ புதையுண்ட ஓர் நட்பின் விதை

இன்று விருட்சமாய் நிழல் தரும் காலம்கனிந்தது

 

நண்பா !

எத்தனை நினைவுகள் !

ஈர் நான்கு ஆண்டுகள்

என் நினைவலைகளுக்குள்

மிக ஆழமாய் நீண்டு கிடப்பது

நம் நட்பு மட்டுமே

 

 

கேலிஇத்து சிரித்த நாட்கள் பல

சோகமாய் கண்ணீரோடு உன் தோள்கள்தேடிய நாட்கள் சில

என் காதல் தோல்விகளையும் உன் இருதோள்களே தாங்கின

 

 

உன்னால் எனக்கு புது உறவுகள் கிடைத்தன

உன் தாய் தந்தையர் எனதுமாய்

உன் மனைவி எனது தங்கையாய்

உன் மகன் உன்னை தாண்டிய தோழானாய்

 

 

இனி வரும் நாட்கள்

உன்னோடு என் பயணம் தொடருமாஎன்பதரியேன்

ஆனால்

இனி எங்கேனும் எனை குறித்த நினைவுகள்உன் நெஞ்சில் எழும் எனில்

 

இக்காகிதத்தை விரித்து பார்

இதில் உள்ள எழுத்துகள்

என் மூளை நரம்புகளின் ஆழத்திலிருந்துஉதிர்ந்தவை

உன் இதழ் வழி சிரிப்பிலும்

உன் இமை நீரிலும்

நான் இருப்பேன்

கரு

விதையே உயிர்ப்பெறு
அணுவை பிளந்திடு
கருவாய் வளர்த்திடு

கனவுகள் தளிருமோ
நினைவுகள் மலருமோ
தாய் மடி மீதிலே
தவழ்ந்திடும் மழலை
சிரிப்பிலே
சுவடுகள் மாறுமோ...

ஒரு சிரிப்பு
முதல் மூச்சு
முதல் முத்தம்
முதல் சபரிசம்
வீணையின் தந்திகள் தேடும் பிஞ்சு விரல்கள்
தாமரை பாதங்கள்
ஒரு தாயின் தேடல்...

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...