Saturday, 5 August 2017

நட்புக்காக

வெள்ளி துளிகளினால்
மண்ணில் நனைவோம்
வண்ண கதிர்களினால்
வானில் வரிவோம்
காற்றாய் காட்டினிடையே
முகில் மூங்கில்
துளைகளினிடையே
பாடி தரிவோம்

இதுவரை நாம் பேசிடும்
மொழிகளில் நட்புடன் மகிழ்ந்தோம்
மௌனத்திலும் சில நேரம்
நம் அன்பை உணர்ந்தோம்
புது புது சுவை தினமும்
உணவில் ருசித்தோம்

கட்டியணைத்து தோலுரசி
அருகில் சில சமயம்
முகம் மறைத்த தொலைவில்
குரல் பதிவில் சில சமயம்

தொலைவிலிருந்தும் நெருக்கமாய்

பளிச்சிடும் சிரிப்பின்
கடைசி பற்களும்
நட்பின நினைவுகள் சொல்லும்

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...