Thursday, 29 December 2016

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 0.2

இரவின் நீலம் திரட்டிய மை கொண்டு
உனக்கென
ஒரு சில வரிகள்.....

உன் தாயின்
கருவறை விட்டு
வீரிட்ட ஒளியோடு
தந்தையின்
கரம் மீது நதியாய்
நீ நெழிந்த நாள் இன்று

உனக்கும்
உன் தாய் தந்தையருக்கும்
இன்று ஒரே வயது

பூமி பந்தின் சுழற்சியும்
உன் மீது காதல் கொண்டே
தன் கடன் மறந்து
அந்த கதிரவனை ஓர் நாள்
தாமதமாய் சுற்றுகிறது ...

உனக்கென ஓர்
பரிசு தரமுடியாமல்
அந்த நிலவும்
கருங்காட்டில்
இன்று தன்னை
ஒளித்துக்கொள்ளும்
தேடிபார் அவன்
நுனி வால் தெரிந்தாலும் தெரியும்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......

Monday, 5 December 2016

மகளே உறங்கு

ஓர் சிம்மத்தின்
கடைசி கர்ஜனை
வின்னில்
தன் ஒழியை மங்க செய்கிறது....

இப்புவி பணிகளால்
களித்துப்போன
உன்னை
தன் மடியோடு
சாய்த்துக்கொண்டாள் தாய் ஒருத்தி
மகளே உறங்கு...

ஆம் ஊர்
உன்ணை அம்மா என்ற போதும்
உன் மணம் தேடுவது
உன் அம்மாவை என்றறிவேன்
மகளே உறங்கு...

Thursday, 1 December 2016

இன்று மழை பெய்யும்

மார்கழி இதழை
முத்தம் இடும் தொலைவில்
கார்த்திகை மாதம்
கதிர் மறையும் முன்பனி காலம்
குளிரும் காற்று
இருகிய போர்வை
போதாத தூக்கம்
நாளிதழ் தேநீர் கோப்பை
துள்ளி குதிக்கும் மழலை கூட்டம்
(இன்று பள்ளிகள் விடுமுறை)

அலுவலகம் செல்லும்
பாதி வழியில்
மழை பீடித்தது
சாலை ஓரம் மழையை வெறித்தபடி
நின்றேன்
என்னோடு இன்னும் சிலரும்,
சிலர் மழையை திட்டவும் செய்தனர்

எப்போதும்
வாகன நெரிசலில்
ரீங்கரிக்கும் சாலை
இன்று புது இசை ஈன்றது
விழும் ஒவ்வொரு
மழைத்துளியும்
தனக்கென ஒரு
தாளத்தில் நடனம் ஆடியது

சிறு வயது நாட்கள்
என் நினைவலைகளை
வருடி சென்றது

செம்மன் குழம்பாகி
அள்ளி பூசிய நாட்கள் அவை
சிரிப்பில் எங்களோடு
போட்டியிட்டு
தோற்று போகும் மழை

நாட்கள் செல்ல செல்ல
அந்த சிறுவனின்
மன குதிரை கடிவாளங்கள்
இறுக்கி கட்டப்பட்டன

இன்று அந்த குதிரையின்
முடிச்சிகள்
ஒவ்வொன்றாய்
அவிழ்க்கப்படுகிறது

முடிந்து விட்ட போட்டியை
மீண்டும் அதே சிரிப்போடு
தொடங்கியது மழை
சிரிப்பின் ஒலி அதிகரித்தது

தேங்கி நின்ற மழை நீரில்
குதித்தேன்
எழுந்தேன்
விண் நோக்கி
முத்துகளை பறிக்க முயற்சித்தேன்
ஈர்ப்பு விசையால்
விழுந்தேன்
மீண்டும் முயற்சித்தேன்
என் அசைவுகள்
நடனம் ஆனது

சுற்றி இருந்த ஆந்தை கண்கள்
எனை வெறித்தது

மழையோடு
விளையாடி நடந்தேன்
களைத்து முடித்தோம்
(மழை நின்ற நொடிகள்)

அலுவலகம் செல்ல வேண்டும்
கணிப்பொறியின் விசைப்பலகை
என் விரல் தீண்ட காத்து கிடக்கும்

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...