கருமை தீட்டும்
இரவின் ஓரம்
மேகம் தூவும் சாரல் வீசும்
இரவின் தொடக்கமா
இது காதல் பயணமா
முடிவின் நொடிகளில் இது மீண்டும்
தொடங்குமா
அறையின் குளுமையும்
இங்கு அனல் போல் வீசுதே
கரங்கள் இணைகையில்
காதல் மீளுதே
படுக்கை அறையின் நீலம்
குறைந்திடுதே
இமைகள் கூறும் கவிதைகள்
நம் இதழகள் எழுதி ருசித்தது
இலை உதிர் கால மரங்களாய்
என் பெண்மை இங்கே உடையுதே அன்பே
மோகம் துளிர் விட தொடுங்குதே
அச்சம் இரு புறம் சூழுதே
ஆண் என்ற திமிரும் ஒடுங்குதே
அன்பே
மஞ்சள் பூசுதே
அடி வானம் சிவக்குதே
ஆடை தேடியே என் கரங்கள் அலையுதே
உதவிட வா என் அன்பே
தேனீர் கோப்பையில்
புது சுவைதான் கூடுதே
உன் இதழ்கள் சுவைதத்தா
நம் இதழகள் சுவைதத்தாலா அன்பே