Friday, 6 June 2014

கருமை தீட்டும் இரவின் ஓரம்

கருமை தீட்டும்
இரவின் ஓரம்
மேகம் தூவும் சாரல் வீசும்

இரவின் தொடக்கமா
இது காதல் பயணமா
முடிவின் நொடிகளில் இது மீண்டும் தொடங்குமா

அறையின் குளுமையும்
இங்கு அனல் போல் வீசுதே
கரங்கள் இணைகையில்
காதல் மீளுதே
படுக்கை அறையின் நீலம் குறைந்திடுதே

இமைகள் கூறும் கவிதைகள்
நம் இதழகள் எழுதி ருசித்தது
இலை உதிர் கால மரங்களாய்
என் பெண்மை இங்கே உடையுதே அன்பே

மோகம் துளிர் விட தொடுங்குதே
அச்சம் இரு புறம் சூழுதே
ஆண் என்ற திமிரும் ஒடுங்குதே அன்பே

மஞ்சள் பூசுதே
அடி வானம் சிவக்குதே
ஆடை தேடியே என் கரங்கள் அலையுதே
உதவிட வா என் அன்பே

தேனீர் கோப்பையில்
புது சுவைதான் கூடுதே
உன் இதழ்கள் சுவைதத்தா
நம் இதழகள் சுவைதத்தாலா அன்பே

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...