Wednesday, 20 April 2016

என் முதல் காதல்

மூடி வைத்த இதழ்களுக்குள்
அடைபட்ட மகரந்தமாய்
என் ஆசை அனைத்தும்
இதயத்தை கனக்குதடி

விழிகளுக்கும் கடிகாரத்திற்க்கும்
இடையே பந்தயம்
கடிகாரம் தோற்றுப்போணது
அறுபது வினாடிகளுக்குள்
எழுபது முறையேனும் கடிகாரம் பார்த்திருப்பேன்

உன்னோடு உரையாடி
அரை பொழுது ஆனதடி
இரவிலே உறக்கம்மில்லை
காலையில் உணவுமில்லை

இல்லையென்று உரைத்திருந்தால்
அக்கணமே மறந்திருப்பேன்
ஆம் என்று சொல்லியிருந்தால்
எத்திசையெனும் உனதருகில்
காற்று புகாது அனைத்திருப்பேன்
புரியாமல் பேசிவிட்டாய்
என்னை பிததனாய் ஆக்கிவிட்டாய்

நான் விரும்பும் ஊன் கூட
இன்றேனோ கசக்குதடி
நீ ரூசிக்கும் உணவு மட்டும்
என் நாவு கேட்குதடி

உன் தந்தை மீது நீ கொண்ட பாசம்
உன் மதிப்பை கூட்டுதடி
சொல்லிவிட்டு வா
உன்னோடு சேர்த்து
உன் தந்தையையும் காதலிப்பேன்....


நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...