Wednesday, 29 January 2014

இழை சிந்தும் சாலையில்

இழை சிந்தும் சாலையில்
ஒரு சாரல் பயணம் போக
வெயிலின் ஜீவாலையும்
குளிரும் காற்றானதே !

மழை துளி தாங்கிடும்
ஒரு குடை என மாறினேன் ..

உன் இதழ் தமிழ் கேட்டிட
என் உயிர் வரி தருகிறேன் !

நூலில் கோத்த பூவாய்
என்னுள்
நீயும் ஆகிறாய.!!!!!!!!!!!!!!

நூலிழை பட்டம் போல்
நீ வருவதை ரசிக்கிறேன்


காற்றில்
கையை அட்டும்
பாவை உன்னால்

ஒரு  பொம்மை ஆகிறேன்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உன்னுள் எவ்வொரு நாளும் என்றோ
மறந்து போகும்
இவ்வொரு நாள் தவிர
உன் வாழ்வு தொடங்கிய முதல் நாள்
உன் தாய் தந்தையின் முதல் நாள்
இப்புவி காற்றும் உன் மூச்சு காற்றும்
காதலிக்க தொடங்கிய முதல் நாள்

உனக்கென்ன பரிசாய் தருவது
பரிசு எதுவாயுனும் உன் பிறந்த நாளில்
பிறந்ததாய்
இருக்க வேண்டும்

இன்று இந் தாய் தமிழ் கவி இன்றி
வேறொன்றும் ஜனனம் இல்லை...

---- பிறந்த நாள் வாழ்த்துக்கள்---- 

Sunday, 12 January 2014

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்



இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கலோ பொங்கல் பாடணும்
பொங்க வச்சி ஆடணும்
தை மாசம் ஒன்னாம் தேதி
ஊரோடு கூடணும்
மச்சானுக்கு சொல்லணும்
மாமனுக்கு கையால பொங்க  அள்ளி  ஊட்டனும்

கரும்போடு தோரணம் வாசலில கட்டனும்
மஞ்சள்ஓடு குங்குமம்
மாட்டுக்கு பூசணும்
நெல்ல தொட்டு வணங்கனும்
வயல தொட்டு வணங்கனும்
நன்றியோட சூரியன
வாசலில வணங்கனும்

மாமனோடு மயில காளை
மல்லுகட்டும் வேலையில
அவரோட வீரத்த
ஊரே புகழயில
மச்சா……………………னு
கததும்போது வெட்கம் தாலல
எனக்கு வெட்கம் தாலல

வேம்பு வெட்டி விரகாக்கி
மண்பான பொங்கல் இட்டு
உரவோடு சேந்து பொங்கும் போது
பொங்கலோ பொங்கல் சொன்னோம்
நாங்க அப்போ

கேஸ் அடுப்ப வச்சிக்கிட்டு
குக்கருள பொங்க வச்சி
பொங்கமலே பொங்கலுங்குரோம்
இப்போ

வீட்ட விட்டு வெளியேரி
விடியும் வரை விளையாடி
வேர்வயில குளிச்சோம்
நாங்கஅப்போ

வீட்டுக்குல ஒளிஞ்சிக்கிட்டு
திரைய மட்டும் பாத்துக்கிட்டு
பொங்காலா ? னு கேக்குறோம்
இப்போ

தமிழோட திருவிழா
தமிழனோட திருவிழா
தமிழா உன் திருவிழா
தமிழா நம் திருவிழா

பொங்கலோ பொங்கல் பாடுவோம்
பொங்க வச்சி ஆடுவோம்




எழுத்துக்கள்
        செ. கோபி

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...