இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல் பாடணும்
பொங்க வச்சி ஆடணும்
தை மாசம் ஒன்னாம் தேதி
ஊரோடு கூடணும்
மச்சானுக்கு சொல்லணும்
மாமனுக்கு கையால பொங்க அள்ளி ஊட்டனும்
கரும்போடு தோரணம் வாசலில கட்டனும்
மஞ்சள்ஓடு குங்குமம்
மாட்டுக்கு பூசணும்
நெல்ல தொட்டு வணங்கனும்
வயல தொட்டு வணங்கனும்
நன்றியோட சூரியன
வாசலில வணங்கனும்
மாமனோடு மயில காளை
மல்லுகட்டும் வேலையில
அவரோட வீரத்த
ஊரே புகழயில
மச்சா……………………னு
கததும்போது வெட்கம் தாலல
எனக்கு வெட்கம் தாலல
வேம்பு வெட்டி விரகாக்கி
மண்பான பொங்கல் இட்டு
உரவோடு சேந்து பொங்கும் போது
பொங்கலோ பொங்கல் சொன்னோம்
நாங்க அப்போ
கேஸ் அடுப்ப வச்சிக்கிட்டு
குக்கருள பொங்க வச்சி
பொங்கமலே பொங்கலுங்குரோம்
இப்போ
வீட்ட விட்டு வெளியேரி
விடியும் வரை விளையாடி
வேர்வயில குளிச்சோம்
நாங்கஅப்போ
வீட்டுக்குல ஒளிஞ்சிக்கிட்டு
திரைய மட்டும் பாத்துக்கிட்டு
பொங்காலா ? னு கேக்குறோம்
இப்போ
தமிழோட திருவிழா
தமிழனோட திருவிழா
தமிழா உன் திருவிழா
தமிழா நம் திருவிழா
பொங்கலோ பொங்கல் பாடுவோம்
பொங்க வச்சி ஆடுவோம்
எழுத்துக்கள்
–
செ.
கோபி

No comments:
Post a Comment