Wednesday, 29 January 2014

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உன்னுள் எவ்வொரு நாளும் என்றோ
மறந்து போகும்
இவ்வொரு நாள் தவிர
உன் வாழ்வு தொடங்கிய முதல் நாள்
உன் தாய் தந்தையின் முதல் நாள்
இப்புவி காற்றும் உன் மூச்சு காற்றும்
காதலிக்க தொடங்கிய முதல் நாள்

உனக்கென்ன பரிசாய் தருவது
பரிசு எதுவாயுனும் உன் பிறந்த நாளில்
பிறந்ததாய்
இருக்க வேண்டும்

இன்று இந் தாய் தமிழ் கவி இன்றி
வேறொன்றும் ஜனனம் இல்லை...

---- பிறந்த நாள் வாழ்த்துக்கள்---- 

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...