Thursday, 29 August 2013

தேநீர் ...


இதழ்கள் தேநீர் அருந்தும் போது
என் இதழ் சொல்ல வார்த்தை ஏது
கோப்பையிலே ஒரு துளியாய் மாறிட வேண்டும்

உன் குழல் வழியே உடல் எங்கும் தீண்டிட வேண்டும்

Tuesday, 30 July 2013

கூந்தல்




முகிலாடும் பொழுதினிலே
அசைந்தாடும் தோகை போல்
இடை மீது களைந்தாடும் கூந்தலே

Wednesday, 29 May 2013

என் தோழனே ! பெண் என்றாள் யார் அவள் ?

தோழனே என் தோழனே
கொஞ்சம் கேளுங்கள்
கெஞ்சி கேட்கிறோம்
பெண் என்றாள் யார் அவள்
 
 
இரவில் காயும் நிலவுக்கும் அவள் பெயர்
நம்மை சுமக்கும் மண்ணுக்கும் அவள் பெ­யர்
பாயும் நதிக்கும்
கொட்டும் அருவிக்கும்
சிலிர்க்கும் மழைக்கும்
அவள் பெயரே
 
 
காந்தல் மலரெண சிரித்தவள்
இன்று காய்ந்த சறுகை போல் எரிவதா
அழகு மேனி மீதினிலே
ஓர் அமிலம் உருண்டோடுவேதும் சரியா
இது முறையா என் தோழனே
 
 
பெண்ணை தாயாய் பார்க்க வேண்டாமே
பெண்ணை கடவுளாய் எண்ண வேண்டாமே
பெண்ணை முதலில்
பெண்ணாய் பார்ப்போமே
என் தோழனே
 
 
என் முண்டாசு கவியின் கனவுகள்
வெறும் கனவாய் மட்டும் போகுமோ
 
 
புத்தகம் சுமக்கும் பருவமே
விலாவில் கருவை சுமப்பதா
 
 
காந்தி தந்த தேசம் இது பெண்ணுகில்லையா
ஆண்கள் கையில்
பெண்கள் வெறும் பொம்மை ஆகவா
 
 
என் தோழனே 
ஒரு பாதை போட்டிடு
அவள் போகட்டும்
அவள் வெற்றி என்றும் உனக்கில்லையா
 

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...