விழிமேலே
விழிமேலே
ஒரு தூக்கம் நான் தூவட்டுமா
இரு இமைகள் இடையில்
ஒரு பாலம் ஆகட்டுமா
ஒரு பாலம் ஆகட்டுமா
உன்
குருஞ்சிரு
சிரிப்பினிடையில்
என் பெயர் நான் சேர்க்கட்டுமா.
குருஞ்சிரு
சிரிப்பினிடையில்
என் பெயர் நான் சேர்க்கட்டுமா.
மேகம் பிழிந்த
நீரெடுத்து
புலர் காலை மலரின் மேல் தெளித்து
நட்சத்திரங்களின்
நிழல் பதித்து
குயிலின் கீதம்
தான் இசைத்து
உனக்கென ஓர் வரியில்
செந்தழல் நீரிலொரு
பூவானதால்
ஓர் பார்வையால்
என் வேர் சாய்க்கிராய்
பனி
தீ மீதில்
ஒரு துளியானதால்
இதய குழாயில்
புது நீர் பாய்ச்சினாய்
நீர் மீது நீயும்
இழைத் துவினாய்
இழை மீது ஊரும்
ஓர் எறும்பாகிரறேன்
No comments:
Post a Comment