Tuesday, 4 February 2014

விடியும் காலை உந்தன் மடியில்

விடியும் காலை உந்தன் மடியில் வேண்டும்
இரவின் இருளும் உந்தன் விழியில் வேண்டும்
என் கரம் உன் கரத்தோடு
என்னை உன் தோளில் சாய்த்திடு
                             
தோளிலே உன்னை சாய்த்திட
தோழானாய் நானும் இல்லை
மடியிலே உன்னை சாய்க்கிறேன்
தாய் என நானும் கொஞ்சம்
                             
விண் மீன்கள் இரண்டு
உந்தன் விழிகளில் அசைந்தாடுதோ
கரு மேகங்கள் ஒன்று கூடியே
உந்தன் விழிகளில் மை தீட்டுதோ
                             
இன்றிலும் இந்த வார்த்தையை
எந்த கவியிலும் நான் கேட்கவில்லை

இதுவரை எந்த கவிஞனும்
இந்த விழிகளை பார்த்ததில்லை

மாறன் நெஞ்சம் இது
வெண்பா வை மஞ்சம் ஆனது

வெண்பாவை தஞ்சம் கொள்ளவே
மாறன் நெஞ்சும் ஆனது

உன் கூந்தல் வாசம் தேடியே
பூ எல்லாம் முகர்ந்து பார்க்கிறேன்
பூ எல்லாம் படைத்த பூ வாசம்
என்றே வியந்து போகிறேன்

இடை மீது கொடியா
உந்தன் விரல் சொல்லும் படியா
எந்தன் உடை ஆனது

இழை மீது துளியா
உந்தன் இதழ் மீது துளியா
எந்தன் இதழ் அருந்தவோ

No comments:

Post a Comment

நட்புக்காக

வெள்ளி துளிகளினால் மண்ணில் நனைவோம் வண்ண கதிர்களினால் வானில் வரிவோம் காற்றாய் காட்டினிடையே முகில் மூங்கில் துளைகளினிடையே பாடி தரிவோம் ...